×

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், சித்திரை திருவிழாவுக்கான, பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, மார்ச்.30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல், 16ம் தேதி வரை 18 நாட்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான,பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 12ம் தேதியும்,தேரோட்டம், ஏப்ரல் 13ம் தேதியும் நடைபெறுகிறது.விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோயில் வளாகத்தில் இன்று (07ம் தேதி) காலை நடை பெற்றது. இதையொட்டி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்ய, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்….

The post தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது appeared first on Dinakaran.

Tags : Thanjavur Big Temple Painting Festival ,Thanjavur ,Thanjavur Big Temple ,Panthalkal Mukurtam ,Chitra Festival ,
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...